சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

நெமிலி அருகே சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பஞ்சராத்ர ஆகம முறைப்படி நேற்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணியளவில் சுப்ரபாதம், சதுஸ்தான அர்ச்சனம், பிரதிஷ்டை ஹோமம், மஹாபூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், மாலை 3 மணியளவில் சுந்தரவல்லி நாயகி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரப் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story