விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும், மாலையில் சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்கள் தரிசனம்

சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story