திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமைகருணாநிதி் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவராக 50 ஆண்டு காலம் செயல்பட்ட கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 13 முறை போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றார். 19 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பேற்று திறம்பட ஆட்சி செய்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார்.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தார். தமிழ்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தொழில் பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்பை அதிகரிக்க செய்துள்ளார். இத்தகைய சிறப்பை பெற்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3-ந் நாள் தொடங்கி ஓராண்டு காலம் நடத்த வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்வாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், யூனியன் தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், நகர பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், வட்டம், வார்டு கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.