போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு


போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2022 11:49 PM IST (Updated: 29 July 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்

நன்னிலம்

நன்னிலம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கோப்புகளை ஆய்வு செய்து கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தற்போது போலீஸ் நிலையம் இருக்கும் இடம் நன்னிலம் தாசில்தார் அலுவலகத்துக்கு சொந்தமான இடமாகும். தாசில்தார் அலுவலகம் தற்போது பழுதடைந்து இடிக்கப்பட உள்ளதால் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார். ஆய்வின் போது நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் இருந்தனர்.


Next Story