ஆத்தூர் சிறையில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


ஆத்தூர் சிறையில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் கிளை சிறையில் சேலம் மாவட்ட சிறைத்துறை சூப்பிரண்டான தமிழ்ச்செல்வன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினார். அங்கு சிறை காவலர்கள் தங்கி இருந்த அறையில் ஏராளமான பீடிக்கட்டுகள், தீப்பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன. யாருக்கு கொடுக்க வைத்து இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story