கரியாலூர் போலீசார் 8 பேர் கூண்டோடு இடமாற்றம் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு


கரியாலூர் போலீசார் 8 பேர் கூண்டோடு இடமாற்றம் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியாலூர் போலீசார் 8 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 18 போலீசாரையும் பணியிட மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கரியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு கமலா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தலைமைக்காவலர் நெடுஞ்செழியன் கள்ளக்குறிச்சி கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசார் தனசேகர் கள்ளக்குறிச்சி தீவிர குற்றப்பிரிவிற்கும், சுரேஷ் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், மாரியப்பன் கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவிற்கும், சத்யராஜ் கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ராஜீவ்காந்தி கள்ளக்குறிச்சி தீவிர குற்றப்பிரிவிற்கும், ஜெயவேல் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கள்ளக்குறிச்சி தீவிர குற்றப்பிரிவில் பணி புரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீச்சந்திரன், கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸ் நிலைய தலைமைக்காவலர் ஆனந்தன், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய தலைமைக்காவலர் மயில்வாகனன், சங்கராபுரத்தில் போலீஸ்காரர் கோபால் ஆகியோர் கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு போலீசார்

மேலும் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த சுரேஷ், எலவனாசூர்கோட்டை தனிப்பிரிவிற்கும், திருநாவலூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் ராம்குமார் பகண்டை கூட்ரோட்டிற்கும், உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ்காரர் அய்யனார் வரஞ்சரத்திற்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய தலைமைக்காவலர் தேவேந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், சங்கராபுரம் போலீஸ்காரர் யுவராஜ் கள்ளக்குறிச்சிக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ராஜேஷ், கள்ளக்குறிச்சி தீவிர குற்ற பிரிவிற்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் சங்கராபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி தலைமைக்காவலர் ஜெயப்பிரகாஷ் கீழ்குப்பத்திற்கும், கீழ்குப்பம் போலீஸ்காரர் செந்தமிழ்ச்செல்வன் திருப்பாலபந்தலுக்கும், சங்கராபுரம் போலீஸ்காரர் விஜய் கள்ளக்குறிச்சிக்கும், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு காவல் நிலைய தலைமைக்காவலர் இளையராஜா ரிஷிவந்தியத்திற்கும், தலைமைக்காவலர் வெங்கடேசன் கள்ளக்குறிச்சிக்கும், எலவனாசூர்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எங்கள்துரை கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 8 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சக போலீசாரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story