நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு


நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
x

நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரிமலையில் நெடுஞ்சாலை துறையில் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை, கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் முரளி ஆகியோர் ஏலகிரிமலை வளைவு பகுதிகளில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள சாலைகள் திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்த போதிலும் 14 வளைவு சாலைகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சேதம் அடைந்த சாலைகளையும், சேதமடைந்த தடுப்பு சுவர்களையும் ஆய்வு ெசய்தனர். மேலும் இதுகுறித்த ஆய்வு கூட்டம் உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி பொறியாளர் சீனிவாசன், சாலை ஆய்வாளர் வெங்கடேசன், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story