பள்ளி மாணவனுக்கு புதிய ஷூ வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு
கிழிந்த ஷூவுடன் பயிற்சி செய்த பள்ளி மாணவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு புதிய ஷூ வாங்கி கொடுத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஜோலார்பேட்டையில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். அரசினர் ஆண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் தருண் என்ற மாணவனும் பயிற்சி செய்து வந்தான்.
இந்த மாணவன் கிழிந்த ஷூவுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். அதை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாணவன் தருணுக்கு புதிய ஷூ வாங்கிக் கொடுத்து நன்றாக பயிற்சி செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்து கூறினார்.
Related Tags :
Next Story