சினிமா பாடலுக்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


சினிமா பாடலுக்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

திருப்பத்தூரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ‘ஜித்து ஜில்லாடி’ பாடலுக்கு பொதுமக்களுடன் நடனமாடினார்.

திருப்பத்தூர்

நடனமாடி கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடினர். அப்போது பாதுகாப்பு குறித்து ரோந்து சென்ற போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பொதுமக்களோடு சேர்ந்து புத்தாண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஜித்து ஜில்லாடி பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மகிழ்ச்சியாக உள்ளது

அவருடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் சேர்ந்து நடனம் ஆடினர். மேலும் அவருடன் செல்பி எடுத்து, ஆட்டோகிராப் வாங்கினார்கள். அப்போது போலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில் எனது முகாம் அலுவலகத்தில் இருந்து நான் புறப்பட்ட போது எங்குமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இல்லையே என நினைத்தேன். இங்கு பார்க்கும் போது பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் அனைவரும் அனைத்து விழாக்களையும் கொண்டாட வேண்டும்.

இந்தப் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.


Next Story