நள்ளிரவில் 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 8:37 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை பஸ் நிலையம் முன்பு போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆங்கில புத்தாண்டை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை பஸ் நிலையம் முன்பு போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆங்கில புத்தாண்டை 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

நள்ளிரவு 12 மணிக்கு தக்கலைக்கு போலீஸ் சூப்பிரண்டு வந்தார். அப்போது பஸ் நிலையத்தின் முன்புற வாசலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அவர் 'கேக்' வெட்டி கொண்டாடினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு இருந்த போலீசார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களுக்கு கேக் வழங்கி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், தொழிலதிபர் சண்முகம், ஜூடு சேம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டினார்

இதுதவிர திங்கள்சந்தை சந்திப்பு, நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையம் மற்றும் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியிலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.


Next Story