காவலர் பல்பொருள் அங்காடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
விழுப்புரம் காவலர் பல்பொருள் அங்காடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் இயங்கிவரும் காவலர் பல்பொருள் அங்காடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கோப்புகள் மற்றும் வரவு, செலவு கணக்குகள் அனைத்தையும் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ஆய்வுக்கு உட்படுத்தினார். அவற்றை ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கோப்புகள், பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story