தங்கப்பதக்கங்களை வென்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு


தங்கப்பதக்கங்களை வென்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
x

தங்கப்பதக்கங்களை வென்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

திருச்சி

இந்திய ஓபன் கராத்தே போட்டி புதுடெல்லியில் நடந்தது. இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி செழியன் கராத்தே இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த தனுஷ்கா மற்றும் பிரணவ் கலந்து கொண்டனர். 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட தனுஷ்கா கட்டா மற்றும் குமித்தேவில் தங்கப்பதக்கங்களை வென்றார். இதுபோல் 7 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட பிரணவ் கட்டா மற்றும் குமித்தேவில் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றார். தங்கப்பதக்கங்களை பெற்று திருச்சி திரும்பிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது டிரடிசனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில தலைவர் இளஞ்செழியன், சர்வதேச நடுவர் காளீசன், பயிற்சியாளர் பிரதாப் உடன் இருந்தனர்.


Next Story