இந்து அமைப்புகளுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
இந்து அமைப்புகளுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்
திருச்சி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக இந்து அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்துமுன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 150 பேர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story