டிராவல்ஸ் உரிமையாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
புகையிலை பொருட்கள் கடத்தல்: டிராவல்ஸ் உரிமையாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட தனியார் பார்சல் நிறுவன உரிமையாளர்கள், கொரியர் சேவை மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தங்களுக்கு வரும் பார்சல்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உட்பட வேறு பொருட்களை அனுமதிக்க கூடாது. அவ்வாறு ஏதேனும் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியாக பார்சல்கள் அனுப்ப வந்தால், அவர்கள் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story