நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில்தூய்மை பணியில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு


நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில்தூய்மை பணியில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.

தூய்மை பணியில் போலீஸ் சூப்பிரண்டு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தானே முன்னின்று ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள பழைய ஓட்டு கட்டிடம் பராமரிப்பு இன்றியும், புதர் மண்டியும் கிடந்தது. மேலும் தேவையில்லாத பொருட்களும் அங்கு குப்பையாக கிடந்தன.

அலுவலக வளாகத்தில் பூந்தொட்டிகள்

அங்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும், ஆயுதப்படை போலீசாரும் இணைந்து புதர்களை அகற்றி தேவையின்றி கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்தினர். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story