பெரிய நெசலூரில் ஸ்ரீமதியின் பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


பெரிய நெசலூரில்  ஸ்ரீமதியின் பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x

பெரிய நெசலூரில் ஸ்ரீமதியின் பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையிலான போலீசார் பெரிய நெசலூரில் உள்ள மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியின் பெற்றோரிடம் சுமார் 1¾ மணி நேரத்துக்குமேல் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி இறந்த தகவல் எப்போது, பள்ளி நிா்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது, உங்களுக்கு யார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உரிய பதில் அளித்ததாக தெரிகிறது.


Next Story