அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுடன் ரோந்து வாகனங்கள்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுடன் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுடன் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
சாலை விபத்துகளை குறைக்கவும், குற்றங்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை கண்காணிக்கவும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 10 போலீஸ் ரோந்து நான்கு சக்கர வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார்.
இதனை நேற்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போலீஸ் சூப்பிரண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''இந்த கேமராக்கள் தேவைக்கு ஏற்றார் போல் 360 டிகிரி சுழன்றும், வாகன இயக்கத்தின் போதும் பதிவுகளை எடுக்கும் விதமாக உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய திரை பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றால் இரவு நேரங்களிலும் காட்சிகளை தெளிவாக படம்பிடித்து பதிவாக்க முடியும். மேலும் இதன் பதிவுகளை போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது'' என்றார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.