மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடித்த வாலிபருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு


மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடித்த வாலிபருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
x

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடித்த வாலிபரை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட தோப்பலகுண்டா கிராமத்தில் நேற்று சீனிவாசன் என்பவரது மோட்டார் சைக்கிளை கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திருடிச்சென்றது. அவர்களை சீனிவாசன், பொதுமக்கள் உதவியுடன் பின் தொடர்ந்து சென்று வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மடிக்கணினி, டேப், 6 செல்போன்கள், 2 பட்டாகத்தி, 2 புளுடூத், 5 சாவிகள், எடை மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 6 பேரை விரட்டிச்சென்று படித்த சீனிவாசனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பரிசளித்து வெகுவாக பாராட்டினார். மேலும் பொதுமக்கள் இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க தைரியமாக முன்வர வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை எந்த நேரத்திலும் நேரில் வந்து தெரிவிக்கலாம். அல்லது 9442992526 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவுரை வழங்கினார்.

வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி உடன் இருந்தனர்.


Next Story