புதிய மென்பொருள் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் நடந்தது


புதிய மென்பொருள் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் புதிய மென்பொருள் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் நடந்தது.

கடலூர்

புதிய மென்பொருள் மூலம் செல்போன் அழைப்புகளை பகுப்பாய்வு செய்து குற்றவாளிகளை தேடுதல் மற்றும் விரைவாக கண்டுபிடிப்பது குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கான பயிற்சி முகாம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப் கலைக்கல்லூரி செயலாளர் சுப்பிரமணியன், பேராசிரியர் சந்தானராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சென்னை மென்பொருள் வல்லுனர் மகேந்திர ரெட்டி கலந்து கொண்டு புதிய மென்பொருள் குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க...

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேசுகையில், புதிய மென்பொருள் குறித்த பயிற்சியால் குற்றவாளிகளை போலீசார் விரைந்து பிடிக்க மிகவும் பயனுள்ளதாக அமையும். இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் முழு ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, கடலூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சீனிவாசலு, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரூபன்குமார், காவ்யா, சபியுல்லா, விஜிகுமார், ஆரோக்கியராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story