இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தொடங்கி வைத்தார்
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் முடிவடைந்தது.
இதில் இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை தலைவர் டாக்டர் தங்கராஜ், செயலாளர் டாக்டர் சவுந்தரராஜன், பொருளாளர் டாக்டர் செல்வக்குமார், மாநில இணை செயலாளர் டாக்டர் திருமாவளவன், டாக்டர்கள் செல்வராஜ், பாலதண்டாயுதம், சரவணன், பூமாது, அழகுமுத்து உள்பட 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், மருத்துவ பிரதிநிதிகள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், தூய இருதய பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பேரணியாக சென்று பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.