பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு
x

போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கீழ்மொணவூர், மோட்டூர், அப்துல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அங்கு கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை உள்ளதா?, பொதுமக்கள் போதை பொருட்கள் பயன்படுத்துகின்றனரா? என்று சோதனை மேற்கொண்டார். மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் அவர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர் காட்பாடி பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.


Next Story