போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு பகலவன் திடீர் ஆய்வு
வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு பகலவன் திடீர் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கோப்புகளை ஆய்வு செய்த அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் யார்? யார்? என்றும் அவர்கள் தொடர்ந்து குற்றம் செய்வதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் தென்னங்கன்று நட்டு வைத்த அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்து வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.