திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு பகலவன் ஆய்வு
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு பகலவன் ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கு விவரங்களை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு பகலவன், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் திருக்கோவிலூர் போலீசாரின் பணிகள் சிறப்பாக உள்ளது என பாராட்டியதுடன், இந்த பணி மேலும் சிறப்பாக அமையும் வகையில் போலீசாரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் எனவும் கூறினார். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story