போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு


போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு
x

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற போலீஸ்காரரை சூப்பிரண்டு பாராட்டினார்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அரசு பணியாளர்கள் பிரிவில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் ஹரிகிருஷ்ணன் 3 கி.மீ. தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். மேலும் திருச்சியில் நடைபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளில் அமைச்சுப் பணியாளர் சாம் சுந்தர் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினார்.


Next Story