வடசேரி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு 'திடீர்' ஆய்வு


வடசேரி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வடசேரி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ‘திடீர்’ ஆய்வு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அவ்வப்போது திடீரென சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் நேற்று நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தின் முன் ஆட்டோ மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும்படியும், இனி வாகனங்களை போலீஸ் நிலையம் முன் நிறுத்த கூடாது என்றும் உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முன்னதாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் ஆகியவற்றை முறையாக அணிந்து இருக்கிறார்களா? என்று பார்வையிட்டார். அப்போது 'போலீசார் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அவர் பார்வையிட்டார்.


Next Story