பல்பொருள் விற்பனை அங்காடியில் கைவரிசை காட்டிய பலே திருடன்


பல்பொருள் விற்பனை அங்காடியில் கைவரிசை காட்டிய பலே திருடன்
x

திருச்சி நெ.1 கொள்ளிடம் டோல்கேட் அருகே பல்பொருள் விற்பனை அங்காடியில் திருடிய பலே திருடன் கைது செய்யப்பட்டார். அவர் 2-வது நாளாக பொருட்களை திருட வந்தபோது சிக்கினார்.

திருச்சி

திருச்சி நெ.1 கொள்ளிடம் டோல்கேட் அருகே பல்பொருள் விற்பனை அங்காடியில் திருடிய பலே திருடன் கைது செய்யப்பட்டார். அவர் 2-வது நாளாக பொருட்களை திருட வந்தபோது சிக்கினார்.

பல்பொருள் விற்பனை அங்காடி

திருச்சி நெ.1 கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பனமங்கலம் தெய்வா சிட்டி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42). இவர் லால்குடி செல்லும் சாலையில் பல்பொருள் விற்பனை அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதியன்று கடையில் சில பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆனந்த் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராைவ ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஆனந்த் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மீண்டும் திருட்டு

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே நபர் கடைக்கு வந்தார். கடந்த முறை திருடியதை யாரும் தன்னை கவனிக்கவில்லை என நினைத்து, மீண்டும் பொருட்கள் வாங்குவது போல வந்து அங்கிருந்த பொருட்களை திருடினார். இதை கண்காணித்த கடை ஊழியர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், 2 நாட்களாக திருட்டில் ஈடுபட்டவர் பெட்டவாய்த்தலை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மகன் சரண்ராஜ் (29) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர்.


Next Story