தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு


தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம் மேம்பாலங்களாகவும், புதிய தார் சாலை பணிகள் ரூ.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர், கொத்தூர் பகுதிகளில் தரைப்பாலமாக இருந்த பாலங்கள் அனைத்தும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல், மல்லகுண்டா பகுதியில் விரிவாக்கம் செய்து 7 கி.மீ. சாலை அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 16 அடி இடைநிலை சாலையாக மாற்றி அமைக்கும் பணிகளையும் அதனுடைய தரத்தையும் ஆய்வு செய்தார்.

ஆம்பூர் பகுதியில் கைலாசகிரி, மிட்டாளம் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகளையும் விரைவில் முடிக்க உத்தரவிட்டார். மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story