கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2023 1:00 AM IST (Updated: 11 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி நேற்று ஆய்வு செய்தார்.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை நீர்வளத்துறை பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி நேற்று ஆய்வு செய்தார்.பிரதான அணை, பேபி அணை, மதகுகள் மற்றும் சுரங்கப் பகுதியை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story