நெடுஞ்சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


நெடுஞ்சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
x
திருப்பத்தூர்

கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் - தருமபுரி, பென்னாகரம் - ஒகேனக்கல் சாலைகளை நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார். அப்போது சாலையை அகலப்படுத்த ஏதுவாக ஆரம்ப கட்டமாக சிறுபால பணிகள் மற்றும் மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் மாம்பாக்கம், செலந்தம்பள்ளி, பொம்மிகுப்பம் ஆகிய இடங்களில் பருவமழையின்பேது தரைபாலத்தின் மேலே வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டதால் எவ்வித போக்குவரத்து பாதிப்புமின்றி கிராம மக்கள் பயன் பெறுகிறார்கள். இந்த பாலத்தையும் ஆய்வு செய்தார்.

மழைநீர் சேகரிப்பு

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர்- சிங்காரப்பேட்டை சாலையில் பேராம்பட்டு ஏரி பகுதியில் உள்ள வளைவுகளை நேர்பாடு செய்து மேம்பாடு செய்ய ஆய்வு செய்தார். அதேபோல் புதுபேட்டை - நாட்டறம்பள்ளி சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைக் காலங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் வடிகால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் கோட்டப்பொறியாளர் முரளி, உதவிக்கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story