கருப்புபேட்ச் அணிந்து வந்த மேற்பார்வையாளர்கள்


கருப்புபேட்ச் அணிந்து வந்த மேற்பார்வையாளர்கள்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 10:35 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கருப்புபேட்ச் அணிந்து வந்த மேற்பார்வையாளர்கள்

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று அலுவலகத்திற்கு கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, பணி மேற்பார்வையாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் பணி சுமைகள் அதிகரித்துள்ளதாகவும், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தினசரி எப்.டி.ஓ. இலக்கு நிர்ணயித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பணி மேற்பார்வையாளர்கள் காலி பணியிடத்தில், தகுதி யற்ற தொழில்நுட்ப பணியாளர்களை நிரப்புவதை கண்டித்தும், அரசு வளர்ச்சி திட்ட பணிகளில் செயலாற்ற உரிய வகையில் புதிய பொறியாளர்கள் பணியிடங்களை உருவாக்குவதுடன், அதில் தகுதியான மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு வந்ததாக தெரிவித்தனர்.


Next Story