முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக மக்கள் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் காந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி

எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக மக்கள் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் காந்தி கூறினார்.

பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நகர தி.மு.க சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.

தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், சேலை, பாத்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எண்ணற்ற திட்டங்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் ஆட்சியில் பதவி ஏற்ற போது கொரோனா அதிகமாக இருந்தது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். மக்களுக்காக இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்தார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் சிறப்பான ஒரு ஆட்சியை தந்து வருகிறார்.

மக்களுக்கான திட்டங்களை ெசயல்படுத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்ழுழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, அறிஞர், பேரூர் செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story