ஆதரவாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது - எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பரபரப்பு


ஆதரவாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது - எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sept 2022 10:33 AM IST (Updated: 13 Sept 2022 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அதிமுக முன்னாள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் .இதனை தொடர்ந்து ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.


Next Story