சூரங்குடி-உச்சிநத்தம்சாலை விரிவாக்க பணிகள் 15 நாட்களில் முடிக்கப்படும்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


சூரங்குடி-உச்சிநத்தம்சாலை விரிவாக்க பணிகள் 15 நாட்களில் முடிக்கப்படும்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூரங்குடி-உச்சிநத்தம் சாலை விரிவாக்க பணிகள் 15 நாட்களில் முடிக்கப்படும் எனறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி

விளாத்திகுளம் தாலுகா சூரங்குடி ஐந்து ரோடு சந்திப்பு முதல் உச்சிநத்தம் ரோடு பெரிய ஓடை வரையிலான சாலை விரிவாக்க பணிகள் 15 நாட்களில் முடிக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

சாலை பணி

விளாத்திகுளம் தாலுகா சூரங்குடி ஐந்து ரோடு சந்திப்பில் இருந்து உச்சிநத்தம் ரோடு பெரிய ஓடை வரை உள்ள 3.4 கிலோ மீட்டர் தூர சாலை, நெடுஞ்சாலை துறை விளாத்திகுளம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட இதர சாலை ஆகும். இந்த சாலை ஒரு வழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்துதல், 13 பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாலை மொத்தம் ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

15 நாட்களில் முடியும்

இந்த சாலையில் 2.80 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதில் 12 பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியானது இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story