சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம்
சிக்கல்:
கந்த சஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. சிங்காரவேலவர் வள்ளி தெய்வானையுடன் தேரில் அமர்ந்து 4 வீதிகளில் உலா வந்தார். பிறகு சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவிலில் இருந்து தங்க ஆட்டுகிடா வாகனத்தில் சாமி புறப்பட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் கீழவீதிக்கு வந்தார்.அங்கு சிங்காரவேலவர், சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சிங்கார வேலவர், 4 வீதிகளில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேேபால கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. நேற்று முருகன் வேல் வாங்குதல் நிகழ்ச்சி கோவிலில் உள்ள அம்பாள் சன்னதியில் நடந்தது. மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.