3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:30 AM IST (Updated: 14 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் வயிற்றில் இருந்த 3 கிலோ கட்டியை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மனைவி கீதாலட்சுமி (வயது 52). இவர், கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் கீதாலட்சுமியும் கலந்துகொண்டு பரிசோதனை செய்தார். அப்போது அவருடைய வயிற்றில் 3 கிலோ எடையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரின் வயிற்றில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி அரசு தலைமை மருத்துவர் அன்புச்செல்வன், டாக்டர்கள் விமலா, சக்திதாரணி, சிராஜூதீன், தலைமை செவிலியர் பழனியம்மாள் மற்றும் குழுவினர் பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக பெண்ணின் வயிற்றில் இருந்து 3 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story