சிறுநாடார்குடியிருப்பு வேம்படி சுடலைமாடசாமி கோவில் திரு விழா


சிறுநாடார்குடியிருப்பு  வேம்படி சுடலைமாடசாமி  கோவில் திரு விழா
x

சிறுநாடார்குடியிருப்பு வேம்படி சுடலைமாடசாமி கோவில் திரு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

சிறுநாடார் குடியிருப்பு ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு மகா கணபதி பூஜை, மகா ருத்ர ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கும்பம் ஏற்றி தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மகுடகச்சேரி, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை கைவெட்டு, திறளைபலி பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு உணவு எடுத்தல் படப்பு பூஜை, அசைவ அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.


Next Story