பல மாதங்களாகியும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்


பல மாதங்களாகியும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்
x

சோளிங்கரில் பொருத்தப்பட்டு பல மாதங்களாகியும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளன.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டு பகுதிகளிலும், பஸ் நிலையம், அண்ணாசாலை, கருமாரியம்மன் கோவில் கூட்டு சாலை, தக்கான்குளம், கொண்டபாளையம், வாரச்சந்தை மற்றும் தெருக்களின் முக்கிய பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கேமராக்கள் பொருத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் செயல்படாமல் உள்ளது. பெரும்பாலான கேமராக்கள் கம்பத்தில் தொங்கிய படி உள்ளது. இதுகுறித்து நகராட்சி கூட்டத்தில் சில நகராட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும்போது நகராட்சி தலைவர், ஆணையர் பதில் கூறுவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story