மேட்டூர் அணையில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.
சேலம்
மேட்டூர்:
தமிழக நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். அவர் அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். ஆய்வின் போது திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக மேட்டூர் வந்த தலைமை பொறியாளரை மேட்டூர் பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் மது சூதனன் ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story