அம்பையில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு


அம்பையில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
x

அம்பையில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி மூலமாக தமிழக அரசின் அறிவுசார் மையம் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் அம்பை அருகில் உள்ள ஊர்க்காடு பகுதியில் அமைகிறது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுசார் மையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தாலுகா நில அளவையர் மற்றும் அம்பை தாசில்தாரிடம் இடங்கள் குறித்து விரிவான அறிக்கையை கேட்டறிந்தார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி, அம்பை தாசில்தார் சுமதி, தாலுகா தலைமை நில அளவையர் ராஜலட்சுமி, அம்பை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகரசபை தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் அம்பை பகுதியில் நடைபெற்று வரும் பாலம் விரிவாக்க பணிகளையும் கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் அம்பை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.


Next Story