திருச்சியில் 891 மின் இணைப்புகளில் ஆய்வு
திருச்சியில் 891 மின் இணைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி பெருநகர வட்ட மேற்பார்வையாளர் பிரகாசம் உத்தரவின்பேரில், செயற்பொறியாளர் (பொது) சிவலிங்கம் தலைமையில் 25 பொறியாளர்களால் திருச்சி நகரியம் கோட்டத்துக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் மற்றும் பாலக்கரை பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட 891 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றினை சரி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருங்காலங்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும், மின்பயனீட்டாளர்கள் எவ்வித விதிமுறை மீறல்களுக்கும் இடம் தராமல் மின்சாரத்தை சிக்கனமாகவும், பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story