காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு


காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு
x

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது,

கரூர்

அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி மரவாபாளையம் கிராமத்தில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து க.பரமத்தி, அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் நாளொன்றுக்கு 11 லட்சம் லிட்டர், பள்ளப்பட்டி நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் வண்ணம் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

அப்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீராசாமி (கிராமியம்), உதவி செயற்பொறியாளர் விநாயகம், பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் ஜான் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story