மருதாண்டான் வாய்க்கால் பாலத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு


மருதாண்டான் வாய்க்கால் பாலத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு
x

மருதாண்டான் வாய்க்கால் பாலத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

லாலாபேட்டை வழியாக மருதாண்டான் வாய்க்கால் பாலம் ெசல்கின்றது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் கடந்த ஆண்டு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. அதனை பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சேர்ந்து தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.இந்நிலையில் இடிந்த பாலத்தை முழுமையாக அகற்றி புதிய பாலம் கட்டும் பணிக்காக ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக புதியபாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் பாலத்தின் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அசாருதீன் உடனிருந்தார்.


Next Story