பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு


பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு
x

பாச்சல் ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியான இதயநகரில் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணி, பாச்சல் டி.வி. ஸ்டேஷன் பகுதியில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்கூடம், புளியாங்கொட்டை பகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அப்போது பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடிமையம் அமைக்க வேண்டும் என பாச்சல் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி, துணைத்தலைவர் சஞ்சீவி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

புளியாங்கொட்டை பகுதி பொதுமக்கள், ஏரிக்கரையின் மீது புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.


Next Story