ரூ.5¾ கோடியில் புதிய கட்டிடங்கள் கட்ட இடங்கள் ஆய்வு


ரூ.5¾ கோடியில் புதிய கட்டிடங்கள் கட்ட இடங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.5¾ கோடியில் புதிய கட்டிடங்கள் கட்ட இடங்களை ஆய்வு செய்தனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களிடம் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான 10 கோரிக்கைகளை மனுவாக பெற்றார். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவதற்காக கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவதற்காக ரூ.5.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான இடங்களை நேற்று மயிலாடுதுறை மாவட்ட எம்.எல்.ஏ. ராஜகுமார் மற்றும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன்கந்தையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர், குத்தாலம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அமுதலெட்சுமி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சூர்யா,ஜம்புகென்னடி, குத்தாலம் ஒன்றிய உதவி பொறியாளர் பிரதீஷ்குமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story