பதுக்கல் செய்வதை தடுக்க பருப்பு மொத்த வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு


பதுக்கல் செய்வதை தடுக்க பருப்பு மொத்த வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு
x

பருப்பு பதுக்கல் செய்யப்படுவதை தடுக்க மொத்த வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஈரோடு

பருப்பு பதுக்கல் செய்யப்படுவதை தடுக்க மொத்த வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

துவரம் பருப்பு

நாட்டில் உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உணவு பொருட்களை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் துவரம் பருப்பு விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மொத்த வியாபாரத்தை கண்காணிக்க மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் துவரம் பருப்பு விற்பனை தொடர்பாக மொத்த வியாபாரிகளின் விவரம் கணக்கிடப்பட்டு ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

48 மொத்த வியாபாரிகள்

வியாபாரிகளின் கணக்கெடுக்கும் பணி ஈரோடு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. இதில் துவரம் பருப்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பெயர், நிறுவனத்தின் பெயர், கொள்முதல் விவரம், விற்பனை விவரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் துவரம் பருப்பு மொத்த விற்பனையில் 105 வியாபாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 48 மொத்த வியாபாரிகளின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story