புஞ்சைபுளியம்பட்டி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
புஞ்சைபுளியம்பட்டி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஜல்லி குட்டை நீர் வழிப்பாதையை ஒரு தரப்பினர் மயானமாக பயன்படுத்துவதாக பாரதீய ஜனதா கட்சியினர் கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு உதவி கலெக்டர் ரங்கநாதன் தலைமையில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிந்த பின்னர் அக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story