ஊரக திட்ட இயக்குனர் ஆய்வு
சிறுகுடி ஊராட்சியில் ஊரக திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
நத்தம் அருகே உள்ள சிறுகுடி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது அவர், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். பின்னர் பொது இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்த தேதியை குறிப்பிட வேண்டும் என்றும் திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ், வட்டார இயக்க மேலாளர் விஜயலட்சுமி, சமுதாய சுய உதவி குழு பயிற்றுனர் ராதா, கணக்காளர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளை திட்ட இயக்குனர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர்கள் கிருஷ்ணன், முனியாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், ஊராட்சி செயலர் வீரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.