மாநில கல்விக்கொள்கை வரைவுக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
பிரதாபராமபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் மாநில கல்விக்கொள்கை வரைவுக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் புனித மிக்கேல் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் மாநில கல்விக்கொள்கை வரைவுக்குழு உறுப்பினர்கள் ஜவகர்நேசன் மற்றும் பாலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அறிந்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஷெர்லின் விமல் (தொடக்கநிலை), செல்வராஜ் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர் லீனஸ், பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராஜ், கல்வியாளர் பாப்பா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனசாமி, வக்கீல் பூவை முருகு, பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், வைத்தியநாதன், விழுந்தமாவடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் புனித மிக்கேல் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.