எருது விடும் விழா முன்னேற்பாடுளை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழா முன்னேற்பாடுளை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
நாட்றம்பள்ளி தாலுகா புதுப்பேட்டையை அடுத்த கல்நார்சாம்பட்டி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) எருதுவிடும் விழா நடக்கிறது. எருது விடும் விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நாட்டம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர், விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story