வெளிமண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு


வெளிமண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:46+05:30)

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப வனவிலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பருவமழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முதற்கட்ட கணக்கெடுப்பு பணி, முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி வனச்சரகங்களில் கடந்த 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

வெளிமண்டல பகுதி

இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு பிரிவு சரகங்களின் வனப்பகுதியில் நேற்று 2-வது கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் புலிகள், சக ஊண் உண்ணிகளின் இரை மற்றும் அதன் வாழ்விடங்களை கண்காணித்தல் போன்ற பணியில் 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வனவிலங்குகளை காணுதல், கால் தடங்கள் மற்றும் எச்சங்கள் மூலம் அடையாளப்படுத்தி கணக்கெடுக்கப்பட்டது. முன்னதாக முதுமலை தெப்பக்காட்டில் உள்ள அரங்கத்தில் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பணி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறும் என்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.


Next Story